போலி தட்கல் செயலிகள் மூலம் ரூ.20 லட்சம் மோசடி.. கம்யூட்டரின் ஐபி முகவரி மூலம் சிக்கிய ஐஐடி பட்டதாரி..

திருப்பூர் மாவட்டத்தில், ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளை எளிதில் பதிவு செய்ய, செயலியை உருவாக்கி 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஐஐடி பட்டதாரி நபரை ரயில்வே சைபர் கிரைம் போலீசார் கைது செய்து்ளளனர். 4 ஆண்டுகளாக சிக்காத ஐஐடி பட்டதாரி திருப்பூரில் சிக்கியது எப்படி?

  • Share this:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பொத்திபாளையத்தைச் சேர்ந்தவர் 32 வயதான யுவராஜா. இவர் மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் ஐஐடியில் ஏரோஸ்பேஸ் படிப்பில் எம்டெக் பட்டப்படிப்பு முடித்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு, ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளை எளிதில் முன்பதிவு செய்வதற்காக சட்டவிரோதமாக சூப்பர் தட்கல் மற்றும் சூப்பர் தட்கல் புரோ என்ற இரண்டு செயலிகளை உருவாக்கினார். இந்த செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் ஒரு லட்சம் பேர் தங்கள் ஆன்ட்ராய்டு செல்போன்களில் தரவிறக்கம் செய்துள்ளனர்.

இந்த செயலிகள் மூலம் தட்கல் டிக்கெட்டுகளை விரைவில் முன்பதிவு செய்ய முடியும். அதற்கென தனிக் கட்டணத்தையும் செயலி மூலம் வசூலித்துள்ளார் யுவராஜா. இந்த செயலி்களைப் பயன்படுத்தி தட்கல் டிக்கெட்டுகளை சீக்கிரம் பதிவு செய்வது எப்படி என பலர் யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த அளவுக்கு இந்த செயலி்கள் பிரபலமாகியிருந்தன.

தான் உருவாக்கிய இந்த இரண்டு செயலி்கள் மூலம் மட்டும் 2016-ஆம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு மார்ச் வரை 20 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் வரை பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் யுவராஜா. கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்குத் திரும்பி வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார்.


மேலும் படிக்க...நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடமுடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

வீட்டில் இருந்தபடி, தனது செயலிகளை அவர் அப்டேட் செய்தபோது ரயில்வே சைபர் கிரைம் போலீசாரின் இணையவழி பரிசோதனைகளில் இவரது செயலிகள் சிக்கியுள்ளன. அவற்றின் ஐபி முகவரிகளைக் கண்டுபிடித்த போலீசார் உடனடியாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

 

திருப்பூர் ரயில்வே போலீசார் யுவராஜாவைக் கைது செய்துள்ளனர். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இரு செயலிகளும் நீக்கப்பட்டுள்ளன.
First published: October 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading