HOME»NEWS»TAMIL-NADU»rs 1340 crore bank cheating enforcement department raid in private company in trichy crime video vai

ரூ.1,340 கோடி வங்கி மோசடி.. தனியார் நிறுவனத்தில் 4 கோடிக்கு மேல் நகை, பணம் பறிமுதல்.. அதிரடியாக செயல்பட்ட அமலாக்கத்துறை.. (வீடியோ)

500 கோடிக்கு மேல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் நான்கரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வங்கி மோசடி எப்படி நிகழ்ந்தது. அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது என்ன?

  • Share this:



சித்தார் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் நாலு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நகைகள் ஆவணங்கள் பறிமுதல். ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கியில் கடன் பெற்று வேறு நிறுவனத்திற்கு பயன்படுத்தியதாக சிபிஐ அதிகாரிகள் 2018ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தது.

திருச்சி மாநகர் கருமண்டபம் தேசிய கல்லூரி எதிரே சித்தார் என்ற நிறுவனம் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. சித்தார் நிறுவனமானது கடந்த 15 வருடங்களுக்கு மேலாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை இருங்கலூர் அருகேயும் திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள மாத்தூர் அருகே திருச்சி மதுரை சாலை விராலிமலை அருகே  செயல்பட்டு வருகிறது.



இந்த நிறுவனத்தின் தலைவராக சுப்பாராஜ் என்பவரும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக போத்திராஜ் என்பவர் நிர்வகித்து வருகின்றனர். சித்தார் நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சித்தார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் தரவில்லை என போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சித்தார் நிறுவன உரிமையாளர்கள் சித்தர் நிறுவனத்தை விரிவு படுத்துவதற்காகவும், மேலும் மேம்படுத்துவதற்காகவும் தேசியமயமாக்கப்பட்ட இந்தியன் வங்கியில் 1340 கோடி ரூபாய் கடன் பெற்று உள்ளனர்.

கடன் வாங்கிய தொகைகளை சித்தார் நிறுவனத்திற்கு செயல்படுத்தாமல் சித்தர் மருத்துவமனை உள்ளிட்ட அவர்களுக்கு சொந்தமான வேறு நிறுவனங்களுக்கு  பயன்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து இந்தியன் வங்கி அதிகாரிகள் சித்தர் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கடன் தொகை சரியான முறையில் செயல்படுத்தி வருகிறார்களா என்று ஆய்வு செய்தபோது சித்தார் நிறுவனத்திற்காக கொடுக்கப்பட்ட கணிசமான தொகையை என் எஸ் கே பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் கட்டுமானங்கள் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் மேலும் திருச்சி மாநகர் தில்லைநகர் பகுதியில் சித்தார் மருத்துவமனை கட்டுவதற்கு முதலீடு செய்ததாகவும் தகவல் தெரியவரவே சித்தார் நிறுவனத்தின் மீது புகார் மனு அளித்ததின் பேரில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி அமலாக்க துறை அதிகாரிகள் சித்தார் நிறுவன தலைவர் நிறுவனர், அலுவலகம் மற்றும் வீடுகளில் திடீர் சோதனை செய்தனர். சுப்புராஜின் இல்லத்தில் இருந்து ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், சொத்து ஆவணங்களும் மேலும் அவருக்கு சொந்தமான அலுவலகத்தில் இரண்டு கோடியே மூன்று லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் போதிராஜ்க்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்தபோது ரொக்கம் மற்றும் ஆவணங்கள் நகைகள் 35 லட்சம் மதிப்புள்ள வைரம் கைப்பற்றப்பட்டன. அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட தொகை ஆவணங்கள் மற்றும் நகைகளின் மதிப்பு 4 கோடிக்கு மேல்கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் என்எஸ்கே என்று பிரைவேட் பில்டர்ஸ் நிறுவனத்தை கலை ராஜா நிர்வகித்துவரும் நிறுவனத்தையும் சோதனை செய்ததில் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க...சமூக வலைதளங்கள் மூலம் கிளிகளை விற்பனை செய்த கும்பல் கைது..

தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடன் கொடுத்த இந்தியன் வங்கி அதிகாரிகள் சமயபுரம் மற்றும் மாத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த சித்தார் நிறுவனத்தை அவர்கள் வசம் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.







உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: