ஈரோடு கிழக்கு தொகுதியில், கருங்கல்பாளையம், SKC சாலை, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை 5 மாதங்களில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுபோலவே ஈரோடு சூரம்பட்டியில் தேமுதிக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் என்றார்.
குமலன் குட்டையில் நடைபெற்ற நாம்தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜனநாயக நாடு என்பதற்கு பதிலாக பணநாயக நாடு என மாற்றிவிடுமாறு சாடினார். பல்வேறு பாடல்களைப் பாடியும் சீமான் வாக்கு சேகரித்தார்.இடைத்தேர்தலுக்கு 6 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களும் முகாமிட்டுள்ளதால், ஈரோடு கிழக்கு தொகுதி களைகட்டியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Udhayanidhi Stalin