Ration Card: குடும்ப தலைவிக்கு ரூ.1000: மக்கள் அச்சமடைய வேண்டாம்- அமைச்சர்

சக்கரபாணி

கருப்பு நிறம் கொண்ட எந்த அரிசியையும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பக் கூடாது என்றும் அரிசி ஆலை முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

  • Share this:
குடும்பத் தலைவிக்கு மாதம் 1000ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக  மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  விரைவில் இது தொடர்பாக அறிவிப்பார் என்றும் அமைச்சர்  சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'கொரோனா தொற்றில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு 14 வகையான மல்லிகை பொருட்கள் மற்றும் 4000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இதுவரை 99% குடும்ப அட்டைதாரர்களுக்கு 14வகை பொருட்களும் 4000 ரூபாய் நிவாரணத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ‘சில மாவட்டங்களில் பொது வினியோக திட்ட கடைகளில் தரமற்ற மற்றும் நிறமற்ற அரிசி வழங்குவதாக புகார்கள் வந்துள்ளது. கடைகளில் வந்தடைந்த தரமற்ற அரிசிகள் திரும்பப் பெறப்பட்டு தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் வறை 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் கேனின் விலை ரூ.20, கேரளாவில் ரூ.13.. தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையின் பகல் கொள்ளை..


அரிசி கடத்தல் - கடும் நடவடிக்கை
அரிசி மற்றும் நெல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் சக்கரபாணி,   3 மாத காலத்தில் அரிசி மற்றும் நெல் விவகாரத்தில் 1800 வழக்குகள் பதியப்பட்டு, 1859 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும்  கடத்தலில் ஈடுபட்ட 283 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில் 8000 ரேசன் கடைகள் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது என்று தெரிவித்த அமைச்சர்,  ‘வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் ரேசன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இதுவரை 4000 ரூபாய் நிவாரணம் வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் நுகர்பொருள் வானிப கழகம் மூலம் விண்ணப்பித்து பெற்றுகொள்ளளாம்’ என்றும் கூறினார்.

மேலும் படிக்க: தமிழகத்தை இரண்டாக பிரிக்க திட்டமா? மத்திய அரசு பதில்!


குடும்ப தலைவிக்கு ரூ.1000- முதல்வர் அறிவிப்பார்
தொடர்ந்து பேசிய அவர், அரிசி ஆலை முகவர்களை சந்தித்து கூட்டம் நடத்தி,  தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளில் ஆகஸ்ட் 21க்குள் கலர் சர்க்கஸ் (colour sortex) பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது. கருப்பு நிறம் கொண்ட எந்த அரிசியையும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பக் கூடாது என்றும் அரிசி ஆலை முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பயோமெட்ரிக் மூலம் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது கூடிய விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: குடியரசுத் தலைவர், அளுநர் இருக்கை அருகே இடம் ஒதுக்கினோம்- அதிமுக செய்தது நியாயமில்லை!



குடும்பத் தலைவிக்கு மாதம் 1000ரூபாய் வழங்கும் திட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா வேண்டாமா என்ற விவகாரத்தில்  யாரும் அச்சமடைய வேண்டாம். இது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான முடிவினை  அவர் அறிவிப்பார்’ என்று தெரிவித்தார்.
Published by:Murugesh M
First published: