குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. விரைவில் தித்திப்பான அறிவிப்பு

மாதிரிப்படம்

தேர்தல் அறிக்கையில் கூறியது போல் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000 ஆயிரம் வழங்கப்பட்டது.

 • Share this:
  தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

  சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு அளித்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக மக்களின் குறைகள் 100 நாள்களில் தீர்க்கப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் உறுதியளித்தார். மக்களிடம் இருந்து புகார் மனுக்களையும் பெற்றார். தி.மு.க அரசு பதிவேற்றதும் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை ஸ்டாலின் தொடங்கினார். அதற்கான சிறப்பு அதிகாரி ஒருவரையும் நியமித்துள்ளார்.

  Also Read: 8 பிள்ளை பெத்து என்ன?.. கஞ்சி ஊத்த ஆள் இல்ல - கோட்டாட்சியரிடம் கண்ணீர் விட்ட 94 வயது மூதாட்டி

  தேர்தல் அறிக்கையில் கூறியது போல் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000 ஆயிரம் வழங்கப்பட்டது. நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட சில திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டன. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்புகளுக்காக இல்லத்தரசிகள் காத்திருக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், “தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

  மக்களின் நலனுக்காக ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த 14 வகை மளிகை பொருட்கள் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 99 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது. மேலும் விடுபட்ட நபர்களையும் கண்டறிந்து பொருட்கள் வழங்கப்படும்.அதேபோல் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியாகும்” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: