• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கடந்த ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் - உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

கடந்த ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் - உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

உயர் நீதிமன்றம்

உயர் நீதிமன்றம்

கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை நடைபெற்ற இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
    கடந்த அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் நூறு கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குனருமான பி.புகழேந்தி மதுரை சிறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டதாக போலி கணக்கு தயாரித்து ஊழல் நடைபெற்றுள்ளதாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பேண்டேஜ் துணி, அலுவலக பயன்பாட்டிற்கான கவர்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து அனுப்பியதாக சிறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அத்தகைய பொருட்களைப் பெறவில்லை என்றோ, குறைவான அளவில் பெற்றதாகவோ அரசு அலுவலகங்கள் தெரிவித்துள்ளதாகவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை நடைபெற்ற இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகமாக உற்பத்தி செய்ததாகவும் , சிறைக்கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் போலி கணக்கு காண்பிக்கப்பட்டதாகவும், இதில் அப்போதைய சிறைத்துறை கண்காணிப்பாளர், மற்றும் டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஊழல் தொடர்பாக உள்துறைச்செயலாளர், சிறைத்துறை டிஜிபிக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தெரிவித்துள்ள புகழேந்தி, லஞ்ச ஒழிப்புத்துறை இது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: