முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருவொற்றியூரில் இடிந்து விழுந்த குடியிருப்பு வாசிகளுக்கு தலா ரூ.1 லட்சம்: அமைச்சர் வழங்கினார்

திருவொற்றியூரில் இடிந்து விழுந்த குடியிருப்பு வாசிகளுக்கு தலா ரூ.1 லட்சம்: அமைச்சர் வழங்கினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரியம் மக்களுக்கு வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரியம் மக்களுக்கு வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரியம் மக்களுக்கு வழங்கினார்.

 • 1-MIN READ
 • Last Updated :

  சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 24 வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், நல்வாய்ப்பாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக மாற்று வீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இடிந்து விழுந்த குடியிருப்பு வாசிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

  சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் 1998ம் ஆண்டு முதல் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இதில் ஏ,பி, சி, டி என 7 பிளாக்குகளில் 300க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 23 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த குடியிருப்புகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இருந்தது.

  இந்த சூழலில் "டி" பிளாக்கில் இருந்த 24 வீடுகளும் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்து தரைமட்டமாகின. தங்கள் கண்முன்னே வீட்டு உபயோக பொருட்கள், ஆவணங்கள், நகை, பணம் என அனைத்தும் இடிபாடுகளில் சிக்கியதைக் கண்டு மக்கள் கதறி அழுதனர். இதனால், அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது.

  வீடு இடிந்து விழுவதற்கு முன்பே அனைவரும் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வீடு இடிந்து விழுவதற்கு முன்பு தனது சகோதரனின் சான்றிதழை பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு வெளியேறிய 5 நொடிகளில் வீடு இடிந்து தரைமட்டமானதாக சீதா என்பவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் வந்து கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில், திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்த செய்தி கேட்டு வருந்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் தா.மோ.அன்பரசனை விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக அனுப்பி வைத்து பாதிப்புகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டதாக கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மாற்று வீடும், ஒரு லட்சம் உதவித் தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

  அத்துடன் விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விவரங்களை சேகரித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் அமைச்சர் தா.மோ அன்பரசன், மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

  Read More : இவங்க எல்லாமே என் மனைவிதான்.. சகலகலா கல்யாணராமன் சிக்கியது எப்படி?

  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். இதற்கிடையில், குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்ததால் பாதிக்கப்பட்ட 24 குடும்பத்தினரும் 3 திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுளதாக, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார்.

  Read More : நியூஸ்18 செய்தி எதிரொலி.. 20 ஆண்டுகளாக இருளில் தவித்த மக்களுக்கு கிடைத்த வெளிச்சம்

  இந்நிலையில், அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது தொடர்பாக 3 மாதங்கள் முன்பே அரசிடம் பொதுமக்கள் புகார் அளித்ததாகவும், ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

  Must Read : தமிழகத்தில் ஒமைக்ரான் சமூகப் பரவலாக மாறிவருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

  பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், டி.கே.பி. சத்திரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்தபடி, தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். மேலும், அரிசி, பாய், தலையணை, போர்வை, தட்டு, கோப்பை போன்ற அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன. அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  First published: