சென்னையில் ஒரு கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற பஞ்சலோக முருகன் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டனர்.
ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த சிவக்குமாருக்கு சொந்தமான லேத் பட்டறையில் இருந்து, பழமையான சிலை ஒருகோடி ரூபாய்க்கு விலைபேசி விற்க உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரம் தலைமையிலான போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, திருட்டு சிலைகள் விற்பனை செய்வது ஊர்ஜிதமானது.
இதை தொடர்ந்து, கோயில் சிலையை திருடி விற்பனை செய்ய முயன்ற லேத் பட்டறை உரிமையாளர் அனகாபுத்தூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 கோடி மதிப்பிலான 3 கிலோ 50 கிராம் எடை கொண்ட பழங்கால பஞ்சலோக முருகன் சிலையை மீட்டனர்.
விசாரணையில், அரக்கோணம் அடுத்த நெமிலியில் உள்ள பழமையான கோவிலில் இருந்து இந்த சிலை திருடப்பட்டது தெரியவந்துள்ளது. சிவக்குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Also see... பேட்ட திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த்த ரஜினி காந்த்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.