ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

RRR படம் குறித்த வதந்திக்கு ராஜமௌலி மறுப்பு

RRR படம் குறித்த வதந்திக்கு ராஜமௌலி மறுப்பு

RRR படம் திட்டமிட்டபடி வெளியாகாது, தள்ளிப் போகிறது என்று நேற்று வதந்தி கிளம்பியது.

RRR படம் திட்டமிட்டபடி வெளியாகாது, தள்ளிப் போகிறது என்று நேற்று வதந்தி கிளம்பியது.

RRR படம் திட்டமிட்டபடி வெளியாகாது, தள்ளிப் போகிறது என்று நேற்று வதந்தி கிளம்பியது.

  • 1 minute read
  • Last Updated :

ராஜமௌலி இயக்கத்தில் தயாராகியிருக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜனவரி 7 வெளியாகிறது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், படம் திட்டமிட்டபடி வெளியாகாது, தள்ளிப் போகிறது என்ற வதந்தி நேற்று கிளம்பியது. அதனை ராஜமௌலி மறுத்துள்ளார்.

பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ஆர்ஆர்ஆர் படத்துக்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்திப் பதிப்பு மட்டும் முதல் 3 நாள்களில் 100 கோடிகளை வசூலிக்கும் என ட்ரேட் அனலிஸ்டுகள் கணித்துள்ளனர்.

இந்நிலையில் படம் திட்டமிட்டபடி வெளியாகாது, தள்ளிப் போகிறது என்று நேற்று வதந்தி கிளம்பியது.ஆந்திராவில் திரையரங்குக் கட்டணங்களை அரசு பெருமளவு குறைத்துள்ளது. அதிகபட்ச கட்டணமே 90 ரூபாய்தான் என்கிறார்கள். இதனால் புஷ்பா, ஷியாம் சிங்கா ராய் போன்ற படங்கள் பெருமளவு வசூலை இழந்துள்ளன. அதேநேரம் ஒமைக்ரான் தொற்றும் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க.. அமீர் - பாவ்னி உறவை பற்றி பேசி சண்டையில் சிக்கிய பிரியங்கா!

கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கை அறிவித்துள்ளன. டெல்லி போன்ற ஒருசில மாநிலங்கள் திரையரங்குகளை மூட முடிவு செய்துள்ளன. ஏற்கனவே மகாராஷ்டிராவில் 50 சதவீத பார்வையாளர்கள்தான் திரையரங்கில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க.. மரணத்திற்கு பிறகும் ரசிகர்கள் மத்தியில் வாழும் விஜே சித்ரா!

இதையெல்லாம் கணக்கில் வைத்து, படம் ஜனவரி 7 வெளியாகாது என்று சிலர் கிளப்பிவிட்டனர். அதற்கு பதிலளித்திருக்கும் இந்தியின் பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ், ராஜமௌலி என்னிடம் பேசினார். ஆர்ஆர்ஆர் தள்ளிப் போகாது, திட்டமிட்டபடி வெளியாகும் என உறுதியளித்தார் என சமூகவலைத்தளத்தில் கூறியுள்ளார். அத்துடன் ராஜமௌலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.ஆகவே, ரசிகர்கள் வதந்தியை நம்ப வேண்டாம். ஆர்ஆர்ஆர் திட்டமிட்டபடி ஜனவரி 7 வெளியாகும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: