Home /News /tamil-nadu /

குட்டி பூனையை தாய் பூனை கவ்வுவது போல பட்ஜெட் இருக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்

குட்டி பூனையை தாய் பூனை கவ்வுவது போல பட்ஜெட் இருக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்

சட்டமன்றம்

சட்டமன்றம்

சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் நிதிநிலை அறிக்கையை தயார் செய்யும் போது, குட்டி பூனையை தாய் பூனை கவ்வுவது போல இருக்க வேண்டும், பூனை எலியை கவ்வுவது போல இருக்க கூடாது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

    தமிழ்நாடு சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்குக் கூடியதும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரண்டு மணித்துளிகள் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பின்னர், 2021-2022ஆம் நிதி ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது பொது விவாதம் துவங்கியது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயக்குமார் விவாதத்தை தொடங்கினார்.

    ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையை பார்த்தோம். அரசின் நிதி நிலையை சரிசெய்ய இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் நிதிநிலை அறிக்கையை தயார் செய்யும்போது, குட்டி பூனையை தாய் பூனையை கவ்வுவது போல இருக்க வேண்டும், பூனை எலியை கவ்வுவது போல இருக்க கூடாது என்று கூறினார்.

    ஆர்.பி. உதயகுமார்


    அப்போது பேசிய, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்றைக்கு உள்ள ஒரு ரூபாயும், கடந்த ஐந்து வருடத்திற்கு முன் இருந்த ஒரு ரூபாயையும் வைத்து கணக்கு போடக்கூடாது. வருடத்திற்கு வருடம் ரூபாயின் மதிப்பு மாறி வருகிறது. மாநில உற்பத்தி கடன் 18 சதவிகிதம் 15.7 ஆக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் குறைக்கப்பட்டது. ஜெயலலலிதா இருந்த போது கூட ஒரு சதவிகிதம் குறைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியில் 27 சதவிகிதமாக உற்பத்தி கடன் அதிகரித்துள்ளது.

    கடந்த ஆட்சியில் நிதியே ஒதுக்காமல் ஆசைக்கு திட்டத்தை அறிவித்த பின், அதற்கு நிதியை தேடி அலைந்தது தெரியவந்துள்ளது. 2016-19ல் மாணவர்களுக் ஏன் மடிக்கணினி வழங்கவில்லை என்றும் நிதியமைச்சர் அப்போது கேள்வி எழுப்பினார். மேலும், ஜி.எஸ்.டிக்கு யாரோ கையெழுத்திட்டதால் நாம் விற்பனை வரியை உயர்த்துவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டோம் என்றும் கூறினார்.

    Must Read : தமிழக சட்டமன்றத்தில் 4 நாட்களுக்கு பட்ஜெட் குறித்த பொது விவாதம்

    மேலும், திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்காததாலும், செயல்திறன் குறைந்ததாலும் உற்பத்தி கடன் என்பது அதிகரித்து பண வீக்கம் அதிகமாகியுள்ளதாக நிதியமைச்சர் விளக்கம் அளித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திட்டங்களுக்கான மதிப்பீட்டு தொகையில் 3அல்லது 4 சதவீதம் வித்தியாசம் வரலாம் ஆனால் 30, 40சதவீதம் வித்தியாசம் வந்துள்ளது இதன் காரணமாக பேரவையில் விதி 110ன் கீழ் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அதற்கான நிதி, செயல்படுத்தப்பட்ட திட்டம் செயல்படுத்தப்படாத திட்டம் ஆகியவற்றை பேரவையில் விரைவில் அறிவிக்கவுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: RB Udayakumar, TN Assembly, TN Budget 2021

    அடுத்த செய்தி