முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொலை வழக்கில் விடுதலையான ரவுடி வெட்டிக்கொலை...!

கொலை வழக்கில் விடுதலையான ரவுடி வெட்டிக்கொலை...!

அமரன் எனும் அமர்நாத்

அமரன் எனும் அமர்நாத்

  • Last Updated :

கடலூர் அருகே கொலை வழக்கில் விடுதலையான ரவுடி வெட்டி கொல்லப்பட்டார்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த ரவுடி முரளி 2017-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சுந்தர், அமரன் எனும் அமர்நாத் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த புதுச்சேரி நீதிமன்றம், போதிய சாட்சிகள் இல்லாததால் 11 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து காலாப்பட்டு சிறையில் இருந்து வெளியான அமரன், முரளி ஆதரவாளர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக்கருதி தனது உறவினர் காரில் தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தார்.

வடலூரை அடுத்த கருங்குழியில் டாஸ்மாக்கில் மது அருந்த சென்றபோது, அமரனை பின்தொடர்ந்த வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

Also see...

top videos

    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Cuddalore