சிறையில் இருந்து விடுதலையான ரவுடியை குடும்பத்தினர் முன்னிலையில் வெட்டிக் கொன்ற கும்பல்

Youtube Video

சேலம் மாவட்டத்தில் சிலநாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை குடும்பத்தார் முன்னிலையிலே அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.

 • Share this:
  சேலம் மாநகராட்சி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் வைத்தே பிரபல ரவுடி செல்லதுரை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் .கொலையின் பின்னணி என்ன?

  சேலம் மாநகராட்சியில் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான செல்லதுரை. இரண்டு மனைவிகளை கொண்ட இவருக்கு முதல் மனைவி மூலமாக மூன்று குழந்தைகளும், இரண்டாவது மனைவி மூலமாக இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பிரபல ரவுடியான செல்லதுரை மீது கொலை ,கொள்ளை, வழிப்பறி அரிசி கடத்தல் உள்ளிட்ட 15 திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதத்திற்கு முன்பு செல்ல துரையை அடிதடி வழக்கு ஒன்றில் கைது செய்த கிச்சிப்பாளையம் போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

  பின்னர் செல்லதுரையின் மீது அரிசி கடத்தல் வழக்கும் பதிந்து குண்டர் சட்டத்தில் அடைத்தனர். தன்மீது பதியப்பட்ட குண்டர் சட்டம் செல்லாது என்று வழக்குத்தொடர்ந்தார் செல்லதுரை. அதனால் அவரை குண்டர் தடுப்பு பிரிவில் இருந்து விடுவித்தது மாவட்ட நீதிமன்றம்.

  கடந்த 15 நாள் முன்பாக சிறையில் இருந்து வெளியே வந்த செல்லதுறை பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சத்தில் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலையே இருந்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு பிறகு செவ்வாய்கிழமை இரவு ஏழு மணியளவில் சேலம் அம்மாபேட்டையில் உள்ள வழக்கறிஞரை சந்திக்க தனது காரில் சென்றுள்ளார்.

  கிச்சிப்பாளையம் வீட்டின் குப்பைமேடு பகுதி அருகே செல்லதுரை வந்தபோது அவரது காரை முன்னும் பின்னும் இடித்து இரண்டு கார்கள் நின்றுள்ளது . காரில் இருந்து இறங்கிய ஆறுக்கும் மேற்பட்டோர் அறிவாள் கத்தியுடன் செல்லதுரையை தாக்க வந்துள்ளனர்.

  இதை பார்த்த செல்லதுறை தாக்குதலில் இருந்து தப்பிக்க காரில் இருந்து இறங்கி கத்தியவாரே வெளியே தப்பித்து ஒட்டம் பிடித்துள்ளார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினரும் செல்லதுரையின் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

  ஆனால் அதற்குள் விடாத மறித்த கும்பல் செல்லதுரையை தலை ,கழுத்து, என சரமாரியாக வெட்டிசாய்த்து மின்னல் வேகத்தில் தப்பிசென்றது . ரத்தவெள்ளத்தில் சாய்ந்த செல்லதுரை சம்பவ இடத்திலையே துடிதுடித்து உயிரிழந்தார்.

  சம்பவ இடத்திற்கு வந்த கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த செல்லதுரையின் குடும்பத்தார் மற்றும் அக்கம் பக்கத்தினர் கொலையில் ஈடுப்பட்ட நபர்களில் இரண்டு பேரை அடையாளம் கண்டு போலீசாருக்கு தெரிவித்தனர்.

  செல்லதுரையின் முன்னாள் கூட்டாளியான ஜான் மற்றும் அவரது தம்பி தான் கொலையில் ஈடுப்பட்டது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. செல்லதுறை சிறைக்கு செல்ல போலீசாருக்கு ஜான் தான் துப்புகொடுத்த்தாக தெரிகின்றது. அதற்கு பலிதீர்க்க செல்லதுரை , சிறையில் இருந்து வந்த பிறகு ஜானை தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.

  நகை கடையில் கைவரிசை காட்டிய பெண்கள்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி.. (வீடியோ)

   

  இதனால் பயந்து போன ஜான், முந்திக்கொண்டு செல்லதுரையை கொலை செய்திருக்கலாம் என்று உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படை அமைத்துள்ள சேலம் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: