மருந்தக உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி: நடந்தது என்ன? நடவடிக்கை பாயுமா?

மருந்தக உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி: நடந்தது என்ன? நடவடிக்கை பாயுமா?

சென்னையில் 50,000 ரூபாய் மாமூல் கேட்டு மருந்தக உரிமையாளரை மிரட்டிய ரவுடி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனக்கு யாரிடமும் எந்த விதமான பயமும் இல்லை என்று போலீசாருக்கே சவால் விடும் தொனியில் மிரட்டும் ரவுடியின் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சென்னையில் 50,000 ரூபாய் மாமூல் கேட்டு மருந்தக உரிமையாளரை மிரட்டிய ரவுடி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனக்கு யாரிடமும் எந்த விதமான பயமும் இல்லை என்று போலீசாருக்கே சவால் விடும் தொனியில் மிரட்டும் ரவுடியின் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 • Share this:
  கடந்த ஆண்டு பொழிச்சலூரில் ஆயுதபூஜையின் போது பணம் கேட்டு கொடுக்காததால், பழைய இரும்பு கடையை சூறையாடிய வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த பிரபல ரவுடி சிலம்பு, தற்போது ஒரு மருந்தக உரிமையாளர் ஒருவரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் ரவுடி மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

  சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மருந்தகம் ஒன்றை சுமார் ஐந்து வருடங்களாக நடத்தி வருகிறார். கடந்த 5 மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் மற்றொரு மருந்தகம் ஒன்றை திறந்துள்ளார்.

  இதைப்பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க சிலம்பு என்ற ரவுடி வினோத் குமாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தங்கள் பகுதியில் கடை நடத்த வேண்டுமானால் 50,000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

  பணம் தரவில்லை என்றால் கடையை நடத்த விடமாட்டேன் என்றும் பணம் தர மறுத்தால் கொலை செய்து விடுவதாக கூறியுள்ளார். தனது மிரட்டல் குறித்து யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுமாறும் யாராலும் எவராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது மண்ணிவாக்கம் தனது கோட்டை என்று சிலம்பு பேசியுள்ளார்.

  மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆட்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பயந்துபோன வினோத்குமார் மருந்தகம் சங்கத்தினரிடம் சென்று கூறியுள்ளார். அவர்கள் அறிவுறுத்தல்படி மண்ணிவாக்கம் போலீசில் சிலம்பு மீது வினோத்குமார் புகார் அளித்தார்.

  புகாரை பதிவு செய்த மண்ணிவாக்கம் போலீசார் ரவுடி சிலம்பு குறித்து விசாரித்தனர். விசாரணையில் கடந்த ஆண்டு பொழிச்சலூரில் உள்ள இரும்பு கடையில் புகுந்து ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக பணம் கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தில் கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார்.

  சிறையில் இருந்து வெளி வந்ததும் மீண்டும் சிலம்புவின் ஆட்டம் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வினோத்குமார் புகாரில் சிலம்புவை மண்ணிவாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

   

   

  மேலும் படிக்க...அதிமுகவில் அளிக்கப்பட்ட கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பொறுப்பு குறித்து நடிகை விந்தியா விளக்கம்..

  இதற்கிடையே இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் லீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக மருந்து வணிகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சிலம்புவை கைது செய்து அவரது ரவுடித்தனத்திற்கு போலீசார் முடிவு கட்டுவார்களா?
  Published by:Vaijayanthi S
  First published: