Home /News /tamil-nadu /

பிரபல ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் திடீர் சரண்

பிரபல ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் திடீர் சரண்

ரவுடி படப்பை குணா

ரவுடி படப்பை குணா

Rowdy Padappai Guna | தலைமறைவாக இருந்து வந்த பிரபல ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜாரானார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என பல வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.

    படப்பை குணா கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை தேடி வந்தனர்.



    இதனிடையே படப்பை குணாவின் மனைவி நீதிமன்றத்தில் தன் கணவரை போலீசார் என்கவுண்டர் செய்ய முயற்சிப்பதாக மனு ஒன்றை அளித்தார். ஆனால் இதனை மறுத்த காவல்துறை குணாவை எண்கவுண்ட்டர் செய்யும் திட்டம் இல்லை என்றும் அவர் சரணடைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

    Also Read : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள கோவிலில் நேர்த்திக்கடன்

    இதையடுத்து குணாவின் மனைவி மனுவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரவுடி குணா இன்று சரணடைந்தார். ரவுடி குணாவை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி