பழிக்குப் பழி: ஓட்டேரியில் ஜாமினில் வெளியே வந்த ரவுடி வெட்டிக்கொலை..

2012-ம் ஆண்டு நடந்த சதீஷ்குமார், சசிகுமாரின் சகோதரர் கொலை வழக்கில் அப்பு முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.

Web Desk | news18
Updated: January 13, 2019, 11:45 AM IST
பழிக்குப் பழி: ஓட்டேரியில் ஜாமினில் வெளியே வந்த ரவுடி வெட்டிக்கொலை..
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: January 13, 2019, 11:45 AM IST
சென்னையில் பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஒருவர், பழிக்குப் பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்தவர் அப்பு என்ற தினேஷ். இவர் மீது 3 காவல் நிலையங்களில் வழிப்பறி, கொலை மற்றும் கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று ஓட்டேரி பின்னி மில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி அப்புவை, மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அப்பு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ஓட்டேரி காவல்துறையினர் அப்புவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் சதீஷ்குமார் மற்றும் சசிகுமார் என்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், 2012-ம் ஆண்டு நடந்த சதீஷ்குமார், சசிகுமாரின் சகோதரர் கொலை வழக்கில் அப்பு முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் அப்பு ஜாமினில் வெளியே வந்துள்ளார். சகோதரர் கொலைக்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காக அப்புவை 4 பேர் துணையுடன் இருவரும் வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also see... ஆடைகளில் மறைத்து ரூ. 8 கோடி தங்கத்தை கடத்திய கொரிய பெண்கள் 
First published: January 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...