ரவுடியை என்கவுண்டரில் கொன்ற போலீஸ்.. பழிக்கு பழி தீர்க்க அரங்கேறிய சம்பவம்

Youtube Video

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் அருகே ரவுடியை கொலை செய்ததாக தேடப்பட்ட மற்றொரு ரவுடியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

 • Share this:
  திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரைச் சேர்ந்த வீரா என்பவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. உழவர் சந்தை அருகே பழக்கடை நடத்தி வந்த அவர், நேற்றிரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர், வீராவின் வீட்டருகே அவரை சுற்றி வளைத்தனர். தப்பியோட முயன்ற வீராவை அந்த கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொன்றது. இருப்பினும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் வீராவின் தலையை மட்டும் துண்டித்து கையோடு எடுத்துச் சென்றது. அதன்பிறகு குப்பன்குளம் பகுதியில் கிடந்த தலையை, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மீட்டனர்.

  இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலை தொடர்பாக பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பகுதியில் கிருஷ்ணா, அருண், சுதாகர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் பிடித்தனர். அப்போது கிருஷ்ணா என்பவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. அதில், போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி கிருஷ்ணா உயிரிழந்தார்.  ரவுடிகள் தாக்கியதில் காவல் உதவி ஆய்வாளர் தீபன் காயத்துடன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க...தூத்துக்குடியில் லோடு ஆட்டோ விபத்தில் 5 பெண்கள் உயிரிழப்பு..

  2015ஆம் ஆண்டு சதிஷ் என்பவரை வீரா கொலை செய்ததாகவும், அதற்கு பழிதீர்ப்பதற்காக வீராவை கிருஷ்ணா கொன்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி சதிஷின் வீட்டின் முன்பு ரவுடி வீராவின் தலையை வீசி சென்றதும் தெரியவந்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: