சென்னையில் கஞ்சா விற்பனையால் ஏற்பட்ட முன்விரோதம்... ரவுடி வெட்டிக் கொலை...

Youtube Video

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதத்தில், ரவுடி ஒருவரை 3 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். கஞ்சா விற்பனை கொலையில் முடிந்தது எப்படி?

  • Share this:
    சென்னை ஓட்டேரி எஸ் எஸ் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் 23 வயதான மதன். இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணமாகி மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஓட்டேரி பாஷ்யம் தெருவில் ஆட்டோவை நிறுத்தி விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், மதனை அரிவாளால் சரமாரியாக வெட்டத் தொடங்கியது.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற மதன், தெருவில் ஓடத் தொடங்கினார். அப்படியும் விடாத அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியோடி விட்டது. ரத்த வெள்ளத்தில் விழுந்த மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஓட்டேரி போலீசார், மதனின் உடலை அகற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, ஓட்டேரியைச் சேர்ந்த 22 வயதான சூர்யா, 20 வயதான சக்திவேல் மற்றும் 28 வயதான கார்த்திக் ஆகிய மூன்று பேர் சிக்கினர்.

    சூர்யா கும்பலிடம், மதன் கஞ்சா வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விற்று வந்துள்ளார்; ஆனால் வாங்கிய கஞ்சாவுக்கு உரிய பணத்தை முழுமையாக கொடுக்காமல் அரைகுறையாக கொடுத்து வந்துள்ளார் மதன்.

     

    இதுதொடர்பாக சூர்யா கும்பலுக்கும் மதனுக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு வந்துள்ளன. ஒருகட்டத்தில் மதன் சரியாகப் பணம் தராததால், கஞ்சா தருவதை நிறுத்தி விட்டார் சூர்யா. ஆனாலும் விடாமல் மதன், கஞ்சா கேட்டு சூர்யாவை நச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, மதனைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

    மேலும் படிக்க....18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்...

    நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து சனிக்கிழமை இரவு தனியாக நடந்து சென்ற மதனை கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் சூர்யா, சக்திவேல் மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: