சொகுசு பங்களாவில் பயங்கர ஆயுதங்கள்... சிடி மணியின் கூட்டாளிகள் யார்?

பிரபல ரவுடி சிடி மணி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயுதங்களுடன் தப்பியோடிய அவரது கூட்டாளிகளை செல்ஃபோன் சிக்னல்களைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

 • Share this:
  சென்னையில் பிரபல ரவுடியாக வலம்வந்த சிடி மணியை போலீசார் தூப்பாக்கி முனையில் பிடித்துள்ளனர். போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற போது ஏற்பட்ட காயத்தால் சிடி மணி தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகளுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  8 கொலை வழக்குகள் உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் போலீசார் தற்போது சிடி மணியை பிடிக்க காரணம் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் சென்னையின் திநகர் பகுதியில் சிடி விற்று நாட்களை கடத்திவந்த சிடி மணி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறிய குற்றசம்பவங்களை செய்ய தொடங்கியுள்ளார்.

  அதன் பிறகு சென்னையின் தவிர்கமுடியாத ரவுடியாக வளர்ந்து போலீசாருக்கு குடைச்சலை கொடுத்து வந்துள்ளார். இதுவரை நான்கு முறை குண்டர் தடுப்பு பிரிவில் கைது செய்யப்பட்டுள்ள சிடி மணி கடந்த சில ஆண்டுகளாக கொலை வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளார்.

  Also Read : கணவரை பிரிந்த பள்ளி ஆசிரியை 12-ம் வகுப்பு மாணவனுடன் மாயம்... அதிர்ச்சி சம்பவம்

  ஜாமினில் வெளியே வந்த மணி சில நாட்கள் அமைதியாக இருந்துள்ளார். கொரோனா காலத்தில் மீண்டும் தனது ரவுடி சாம்ராஜியத்தை விரிவுபடுத்த தொடங்கியுள்ளார். கள்ளதுப்பாக்கிகளை பதுக்கி விற்பது, பெரிய தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற குற்றச்சம்பவங்களில் அவர் ஈடுபடுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சிடி மணியை இனியும் வெளியில் விட்டால் ஆபத்து என்று கருதிய போலீசார் அவரை குறிவைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிடி மணியின் செல்போனை கைபற்றியுள்ள போலீசார் அவரிடம் தொடர்பில் இருந்த கூட்டாளிகளை பிடிக்க தனிதிட்டம் வகுத்துள்ளனர்.

  அத்துடன் சிடி மணி தொழிலதிபர்களை குறிவைத்து பணபறிப்பில் ஈடுப்பட்டது எப்படி? இந்த கும்பலுக்கு கள்ளதுப்பாக்கி கிடைப்பது எங்கிருந்து என்று விசாரணையையும் முடுக்கிவிட்டுள்ளனர். சென்னையில் ரவுடிகளின் ஆட்டகாசம் அடியோடு தடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் குற்றசம்பவங்களில் ஈடுப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: