Koyambedu | போதையில் மாமூல் கேட்டு அரிவாளால் வெட்டிய ரவுடி.. சிசிடிவி வீடியோ வெளியீடு

Youtube Video

கோயம்பேடு காய்கறி சந்தையில், மூட்டை தூக்கும் 2 தொழிலாளிகளை, ரவுடிகள் பட்டாக்கத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    அரியலூரைச் சேர்ந்த முருகேசன் கோயம்பேடு சந்தையில் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு 9.30 மணி அளவில் வந்த 2 பேர், பட்டா கத்தியால் முருகேசனை வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து கடையில் வேலை பார்க்கும் தொழிலாளி முருகன் ஓடிவர, அவருக்கும் வெட்டு விழுந்தது. தொடர்ந்து, மார்க்கெட்டில் உள்ள தொழிலாளர்கள் சேர்ந்து, பட்டாக்கத்தியுடன் இருந்த ஒருவரை பிடித்து அடித்து உதைத்தனர்.

    கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் வியாசர்பாடியைச் சேர்ந்த ராஜேஷ் என்பதும், அவரது மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் வெட்டு காயம்பட்ட இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக கோயம்பேடு காவல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஒருவரை கைது செய்து கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது வியாசார்பாடி சேர்ந்தவர் ரவுடி ராஜேஷ் என்றும் இவர் மீது ஏற்கனவே அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    மேலும் படிக்க....Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...! (ஜனவரி 29, 2021)

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ராஜேஷ் என்பவருடன் வந்த மர்ம நபரை பற்றி விசாரித்து காவல்துறை வலை வீசி தேடி வருகின்றனர்.

    மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியை சரமாரியாக வெட்டிய சம்பவம், மற்ற கூலி தொழிலாளி மற்றும் வியாபாரிகள் அலறி அடித்து ஓடிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திள்ளது.

    வீடியோ 






    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: