சரவணா ஸ்டோரில் நெய் டப்பா திருடிய ரவுடி... பாத்ரூமில் வழுக்கி கைமுறிந்த பரிதாபம்

போலீசார்  துரத்தியதில் அந்த ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையையும் உடைத்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்தது.

Web Desk | news18-tamil
Updated: July 31, 2019, 10:32 PM IST
சரவணா ஸ்டோரில் நெய் டப்பா திருடிய ரவுடி... பாத்ரூமில் வழுக்கி கைமுறிந்த பரிதாபம்
நெய் பாட்டிலை திருடி மாட்டிக்கொண்ட ரவுடி,
Web Desk | news18-tamil
Updated: July 31, 2019, 10:32 PM IST
நெல்லை சரவணா செல்வரத்தினம் கடையில் நெய் பாட்டிலை திருடி மாட்டிக்கொண்ட ரவுடி, போலீசாரிடம் சிக்கி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையையும் உடைத்து கொண்டுள்ளார்.

நெல்லை பைபாஸ் சாலையில் மேலப்பாளையம் அருகே அமைந்திருக்கும் சரவணா செல்வரத்தினம் ஸ்டோருக்கு வந்த ஒரு கும்பல், கையில் அரிவாளுடன் ஏக ரகளை செய்துள்ளனர். இதனால் அங்கிருந்த கடை ஊழியர்கள், பொதுமக்கள் சிதறி ஓடினார்கள்.

தொடர்ந்து, இச்செய்தி போலீசார் காதுக்கு சென்றவுடன், விரைந்து வந்த போலீசார் அக்கும்பலை துரத்தியுள்ளனர். அதில் ஒரு ரவுடி சிக்கினார்.


போலீசார்  துரத்தியதில் அந்த ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையையும் உடைத்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்தது.

பின்னர், அந்த ரவுடியை கைது செய்து மருத்துவனையில் அனுமதித்துள்ளனர்.

ஏன் சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில் ரகளை செய்தீர்கள் என்ற போலீசாரின் கேள்விக்கு பதில் சொன்ன ரவுடி, ”நான் இதற்கு முன்னர் அந்த கடையில் நெய் பாட்டிலை திருடி மாட்டிக்கொண்டேன். அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் யாரோ பரப்பி வந்தார்கள். அது அங்குள்ளவர்களாகத்தான் இருக்கும் என்று நாங்கள் அச்செயலை செய்தோம்” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Loading...

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...