முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கால் தவறி கீழே விழுந்த ஆளுநர் தமிழிசை.. ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் பரபரப்பு!

கால் தவறி கீழே விழுந்த ஆளுநர் தமிழிசை.. ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் பரபரப்பு!

கால் தவறி விழுந்த ஆளுநர் தமிழிசை

கால் தவறி விழுந்த ஆளுநர் தமிழிசை

மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக்கோள்களும், ஹைப்ரிட் ராக்கெட் மூலம், மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

நாட்டின் முதல் ஹைப்ரிட் ராக்கெட் மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்கள் இணைந்து ஹைப்ரிட் வகை ராக்கெட்டை தயாரித்தனர். மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 5ஆயிரம் மாணவர்கள் இணைந்து 150 சிறிய pico ரக செயற்கைக்கோள்களை உருவாக்கினர். இதில் 2 ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்களும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக்கோள்களும், ஹைப்ரிட் ராக்கெட் மூலம், மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டன.

குறைந்த தூரத்தில் நிலை நிறுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள் மூலம் வானிலை, கதிர்வீச்சுத் தன்மை ஆகியவற்றின் தரவுகளைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கால் தவறி கீழே விழுந்தார். அடுத்தடுத்த நிகழ்ச்சிகளால் தூங்காமல் ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

First published:

Tags: Tamilisai, Tamilisai Soundararajan