ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ் பரோல் கேட்டு மனு

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ் பரோல் கேட்டு மனு
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2019, 1:35 PM IST
  • Share this:
மகனுக்கு திருமண ஏற்பாடு செய்ய பரோல் கேட்டு ராபர்ட் பயஸ் தாக்கல் செய்த மனுவுக்கு சிறைத்துறை டிஐஜி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ராபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள 30 நாட்கள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் திருமண வயதை எட்டுயுள்ளதாகவும் அவரது திருமண ஏற்பாடுகளை கவனிக்க வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.


இதற்காக 30 நாட்கள் பரோல் கேட்டு சிறைத்துறை டிஐஜிக்கு அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் பதிலளிக்க 2 வாரம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Watch Also:
First published: September 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...