• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • கத்தியை காட்டி மருத்துவரின் கார், நகையை பறித்த கொள்ளையர்கள்.. கிண்டியில் இரட்டைக் கொலை..

கத்தியை காட்டி மருத்துவரின் கார், நகையை பறித்த கொள்ளையர்கள்.. கிண்டியில் இரட்டைக் கொலை..

மருத்துவரிடம் கத்தி முனையில் காரைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள்

மருத்துவரிடம் கத்தி முனையில் காரைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள்

கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கிய நிலையில், அவர்கள் இரட்டைக் கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொள்ளை வழக்கில் இரட்டைக் கொலை அம்பலமானது எப்படி?

 • Share this:
  சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், மார்ச் 13ம் தேதி இரவு 10 மணிக்கு மர்ம கும்பல் ஒன்று புகுந்தது. அங்கிருந்த பெண் ஊழியர் உஷாவை மிரட்டி 10 சவரன் நகையைப் பறித்தது. 75 வயதான மருத்துவர் ராமகிருஷ்ணனைக் கத்தி முனையில் மிரட்டி அவரது மோதிரங்களைப் பறித்துக் கொண்டது. அவரது காரையும் கடத்தி தப்பியது. இந்த சம்பவத்தில், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்கள் அடிப்படையில், சிவகங்கையில் பதுங்கியிருந்த 6 பேர் கும்பலைப் போலீசார் பிடித்தனர்.

  6 கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ராக்கப்பன், அவரது கூட்டாளிகள் வந்தவாசியைச் சேர்ந்த சீனிவாசன், பல்லாவரத்தைச் சேர்ந்த சங்கர், ரஜினி ஏழுமலை, மயிலாப்பூரைச் சேர்ந்த கருக்கா வெங்கடேசன், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த நெல்சன் மற்றும் ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த மதன்ராஜ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

  அவர்களிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோதுதான் இரட்டைக் கொலை சம்பவம் அம்பலமானது. கடந்த 2015ம் ஆண்டு ஆவடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் அப்போதைய மாநில செயலாளர் முருகன் என்பவர் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆனந்தன் என்பவர், முருகனைத் தீர்த்துக் கட்டும்படி தனது உறவினர் அண்ணாதுரையிடம் கூறியுள்ளார்.

  அண்ணாதுரை, கூலிப்படைத் தலைவன் ராக்கப்பனிடம் கூற, அவர் தனது ஆதரவாளர்கள் மூலம் முருகனை 2015ம் ஆண்டு ஜூலை மாதம் கொலை செய்தார். இந்தக் கொலை வழக்கிற்கான செலவுகளை அண்ணாதுரை தராமல் இழுத்தடித்தார்.

  மேலும் படிக்க... தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்...

  ஆத்திரமடைந்த ராக்கப்பன், மார்ச் 9ம் தேதி தனது கூட்டாளிகள் மூலம் அண்ணாதுரையையும் அவரது நண்பர் தங்கப்பாண்டியையும் வரவழைத்தார். கிண்டி ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவர் அருகே உள்ள பகுதியில் பாழடைந்த கிணறு அருகில் மது அருந்தியுள்ளனர். மதுபோதை உச்சத்தில், அண்ணாதுரையையும் தங்கப்பாண்டியையும் அடித்துக் கொலை செய்துள்ளனர் ராக்கப்பன் கும்பல். பின்னர் இருவரது சடலங்களிலும் கற்களைக் கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டுத் தப்பியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

  சம்பவம் நடந்த இடத்திற்கு ராக்கப்பனை அழைத்துச் சென்ற போலீசார் கிணற்றில் இருந்து அண்ணாதுரை மற்றும் தங்கப்பாண்டி சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். ராக்கப்பன் கும்பலைக் கைது செய்த தனிப்படை போலீசார் வேறு ஏதாவது குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: