Home /News /tamil-nadu /

கொள்ளை போன தமிழக சிலை.. அமெரிக்காவில் ரூ.33.50 கோடிக்கு ஏலம் போன அவலம்.. மீட்கப்படுமா?

கொள்ளை போன தமிழக சிலை.. அமெரிக்காவில் ரூ.33.50 கோடிக்கு ஏலம் போன அவலம்.. மீட்கப்படுமா?

கொள்ளை போன தமிழக சிலை

கொள்ளை போன தமிழக சிலை

தஞ்சை மாவட்டத்தில், 500 ஆண்டுகள் பழமையான திரிபுர சம்ஹார மூர்த்தி சிலை கொள்ளையடிக்கப்பட்டு, அமெரிக்காவில் முப்பத்து மூன்றரைக் கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. தமிழகத்தின் தொன்மையான சிலை மீட்கப்படுமா?

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே முத்தாம்பாள் புரத்தில் உள்ளது காசி விஸ்வநாதர் கோவில். தஞ்சை மராத்திய அரச வம்சத்தை உருவாக்கிய ஏகோஜி மன்னரின் மகன் முதலாம் சரபோஜி காலத்தில் கட்டப்பட்ட கோவில் இது.

    இந்தக் கோவிலில், 24 உற்வசர் சிலைகளும், 60 கற்சிலைகளும் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் உள்ள இந்தக் கோவிலில், 10 மாதங்களுக்கு முன்பு செயல் அலுவலராக சுரேஷ் என்பவர் பொறுப்பேற்றார். அதன்பின் அவர் கோவிலில் உள்ள சிலைகளை பட்டியலின்படி சரிபார்த்தபோது எண்ணிக்கையில் அவை சரியாக இருந்தன.

    ஆனால், பழைய புகைப்படங்களில் உள்ள திரிபுர சம்ஹார மூர்த்தி எனப்படும் சிவன் சிலை மட்டும் மாறியிருந்தது. புகைப்படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்த போது பழைய சிலைக்குப் பதில் புதிதாக செய்யப்பட்ட சிலை இருந்ததை செயல் அலுவலர் கண்டுபிடித்தார். இதுகுறித்த தகவல்களை அவர் அறிநிலையத் துறைக்கு தெரிவிக்க, அதிகாரிகள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, வெளிநாடுகளில் உள்ள இந்திய கலைப் பொருட்களை மீட்கும் சேவையில் ஈடுபட்டுள்ள இந்தியா பிரைட் பிராஜக்ட் அமைப்பினர், ஒரத்தநாடு திரிபுர சம்ஹார மூர்த்தி சிலை அமெரிக்காவில், 2 மாதங்களுக்கு முன்பு முப்பத்து மூன்றரைக் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டதை அறிந்தனர்.

    மேலும் படிக்க...அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ்... கோலம் போட்டு வாழ்த்தும் பூர்வீக கிராம மக்கள்

    இதுகுறித்த தகவல்களை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்குத் தெரிவித்ததை அடுத்து சிலையை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து அந்த சிலை குறைந்தது 30 ஆண்டுகளுக்கு முன்பே திருடப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.

    மேலும் படிக்க...திருச்சி : களைக்கட்டும் தீபாவளி விற்பனை... பாதுகபாப்பு பணிகள் தீவிரம்

    சிலை திருடப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் எப்ஐஆர் பதிவாகாததால், மீட்பதில் சில சிக்கல்கள் இருந்தாலும் அவற்றைக் கடந்து விரைவில் மீட்டு விடுவோம் என்கின்றனர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார்.













    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்a
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: America, Statue, Tanjore

    அடுத்த செய்தி