ரயில்வே பணிகளுக்காக பொதுவழிகள் மறைப்பு... மாற்றுப்பாதை அமைக்காததால் கோவில்பட்டி மக்கள் அவதி

கோவில்ப்பட்டி

கோவில்பட்டியில், ரயில்வே பணிகளுக்காக வழிகள் மறைக்கப்பட்ட நிலையில், மாற்றுப்பாதை அமைத்துக் கொடுக்காததால் சுமார் ஒரு லட்சம் மக்கள் ஆபத்தான வகையில், ரயில்வே தண்டவாளத்தினை கடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 • Share this:
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், நகரின் மையப்பகுதியில், அமைந்துள்ள தண்டவாள பாதையில், 2வது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு புறத்தில் நகராட்சிக்குட்பட்ட திலகர் நகர், காந்திநகர், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அடிப்படைத் தேவைகளுக்காக இவர்கள் தண்டவாளத்தின் மறுபுறம்தான் ‘செல்ல வேண்டும்.

  இந்த நிலையில், மாற்றுப்பாதைகள் அமைக்கப்படாததால், தினமும் 20 ஆயிரம் பேர் தண்டவாளத்தினை ஆபத்தான வகையில் கடந்து செல்கின்றனர். மழைக்காலங்களில், சுரங்க பாலங்களில் தண்ணீர் தேங்கி விடுவதால் போக்குவரத்து முடங்கி விடுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

  2வது வழித்தடம் அமைக்கப்பட்டால், ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் கூட 3 கிலோமீட்டர் சுற்றி சென்று வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் என்கிறார்கள் அப்பகுதி பெண்கள். முதியவர்கள் தண்வாளத்தை கடக்க முடியமால் கீழே விழுந்து காயத்துடன் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க... திருப்புமுனை: மாற்று அணியாக உருவான மக்கள் நலக்கூட்டணி

  பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான இடங்களில் நடைமேடை மற்றும் சர்வீஸ் சாலை அமைத்துத் தரவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்யவும் மக்கள் முடிவு செய்துள்ளனர்.

     உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: