மதுராந்தகம் அருகே சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

சிங்கப்பூரில் இருந்து வந்தவர்கள் சொந்த ஊர் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..

மதுராந்தகம் அருகே சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
விபத்தில் சிக்கிய கார்
  • News18 Tamil
  • Last Updated: February 23, 2019, 10:17 AM IST
  • Share this:
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

சிங்கப்பூரில் இருந்து பத்மாவதி என்ற பெண்ணும், 12 வயது சிறுமியான திரிஷாவும், சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு வந்துள்ளனர். திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்த அவர்களை, அழைத்து வருவதற்காக பத்மாவதியின் மருமகன் வேல்முருகன், உறவினர் மணிகண்டனுடன் காரில் சென்றுள்ளார்.

4 பேரும் காரில் வந்து கொண்டிருந்தபோது மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் பகுதியில் நிலைதடுமாறிய கார், எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் மணிகண்டன், வேல்முருகன், பத்மாவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


சிறுமி திரிஷா மருத்துவமனையில் உயிரிழந்தார். விபத்து குறித்து மேல்மருவத்தூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: February 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்