விபத்தில் கால் துண்டித்து ஆந்திரா சென்ற இளைஞரின் உடல் மீட்பு!

அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுதாகரின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Web Desk | news18
Updated: January 12, 2019, 2:57 PM IST
விபத்தில் கால் துண்டித்து ஆந்திரா சென்ற இளைஞரின் உடல் மீட்பு!
சுதாகர்
Web Desk | news18
Updated: January 12, 2019, 2:57 PM IST
திருவள்ளூர் சாலை விபத்தில் சிக்கிய இளைஞரின் உடல் ஆந்திராவில் மீட்கப்பட்டது. அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.

திருவள்ளூர் அருகேயுள்ள அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவர் காக்களூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி இரவு 11 மணியளவில் பணி முடிந்து பைக்கில் வீட்டுக்குப் புறப்பட்டார். சென்னை - திருப்பதி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில்  செல்லும்போது, திருப்பதியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, அந்த பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் சுதாகர் உயிரிழந்தார். ஆனால் சம்பவ இடத்தில் அவரது கால் மட்டுமே கிடைத்தது. அவரது உடல் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே சிமென்ட் ஏற்றச் சென்ற காலியான லாரி ஒன்றில் கிடந்தது.

இறந்து போன சுதாகர்.


கார் மோதியதில், சுதாகர் உடல் தூக்கி வீசப்பட்டு லாரிக்குள் விழுந்திருக்கலாம் என தெரியவந்தது. ஆந்திராவிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல், இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Also see... திருவள்ளூர் சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் உடல் மீட்பு
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...