ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 2 மணிநேரத்திற்கு இங்கெல்லாம் வெளுத்து வாங்கும் மழை..வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த 2 மணிநேரத்திற்கு இங்கெல்லாம் வெளுத்து வாங்கும் மழை..வானிலை மையம் எச்சரிக்கை

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த மூன்று மணிநேரங்களுக்கான மழை பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் கணித்து எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. வடக்கு இலங்கையை மையம் கொண்டுள்ள இந்த காற்று அழுத்தத் தாழ்வு பகுதி இன்று கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  இதன் காரணமாக இன்று முதல் 13ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த மூன்று மணிநேரங்களுக்கான மழை பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

  அதேபோல் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க: தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விபரம் இதோ

  அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Heavy Rainfall, Rainfall, Tamil Nadu Rain