தமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..! - பசுமை தீர்ப்பாயம்

தவறும்பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாதந்தோறும் ரூ.5 லட்சம் அபராதம்.

தமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..! - பசுமை தீர்ப்பாயம்
நதி
  • News18
  • Last Updated: December 12, 2019, 7:20 AM IST
  • Share this:
தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, திருமணிமுத்தாறு உள்ளிட்ட 6 நதிகளை தூய்மைப்படுத்த நான்கு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்படி தேசிய பசுமைத் தீர்பாயம் கெடுவிதித்துள்ளது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் நாடு முழுவதும் உள்ள 351 நதிகள் மிகமோசமாக மாசடைந்திருப்பது தெரியவந்தது. அதில், தமிழகத்தில் காவிரி ஆறு மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாசடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோன்று தாமிரபரணி, திருமணிமுத்தாறு, சிறுமுகை, வசிஷ்டா மற்றும் சரபங்கா நதிகளில் 180 கிலோ மீட்டர் தூரம் மாசடைந்திருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக நாளிதழில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், நாடு முழுவதும் உள்ள 351 நதிகளில் கழிவுநீர் கலக்காமல் இருக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுக்க தேசிய பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் நதிகளை மறுசீரமைப்பதற்கான செயல்திட்டங்கள் தயாராகியுள்ள நிலையில், அதனை செயல்படுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2020 மார்ச் மாதத்திற்குள் நதிகளில் கழிவுநீர் கலக்காமல் இருக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கத் தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மாதந்தோறும் 5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்.2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நதிகளை மறுசீரமைப்பதற்கான செயல்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றத் தவறினால் 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளை மாநில அளவில் தலைமை செயலாளரும், தேசிய அளவில் ஜல்சக்தி துறை செயலாளரும் கண்காணிப்பதுடன், மாதம் ஒருமுறை மத்திய அளவில் கூட்டம் நடத்த வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading