முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிகரித்து வரும் வெயில் தகிப்பு: பொள்ளாச்சியில் காட்டுத்தீ அபாயம்..!

அதிகரித்து வரும் வெயில் தகிப்பு: பொள்ளாச்சியில் காட்டுத்தீ அபாயம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நிலவும் வறட்சி காரணமாக, நீர்நிலைகள் வற்றியதால் வனவிலங்குகள் கிராமங்களுக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானை, சிறுத்தை, புலி மற்றும் அரியவகை பறவைகள், அரிய தாவரங்கள் ஆகியவை உள்ளன. இந்தாண்டு ஜனவரி மாதம் முதலே மழைப் பொழிவு இல்லாத காரணத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், பச்சை பசேலென இயற்கைக் காட்சியுடன் காணப்பட்ட வனப்பகுதி, தற்போது மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் புகும் அபாயமும், காட்டுத்தீ ஏற்படும் அபாயமும் உள்ளதாக வன விலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Also see:

First published:

Tags: Pollachi