Home /News /tamil-nadu /

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு... டீ கடை உரிமையாளர்கள் கவலை

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு... டீ கடை உரிமையாளர்கள் கவலை

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு

Commercial cylinder price hike : வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வின் காரணமாக டீ கடை உரிமையாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைப்பதற்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். தற்போது, உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரின் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்திலும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ரூபாய் 105 உயர்ந்து 2,145.50 ஆக விற்கப்பட உள்ளது. இதனால் உணவகங்கள், தேநீர் கடை உரிமையாளர்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் 40 சதவிகித வியாபாரம் குறைந்த நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சிறு தொழில் முனைவோரை கடுமையாக பாதித்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Read More : Group 4 தேர்வுகளுக்கான அட்டவணை இம்மாதம் வெளியீடு - TNPSC தலைவர் பாலசந்திரன்

இந்நிலையில், சமையல் எண்ணெய், பால், சக்கரை, சமையல் எரிவாயு என அனைத்தின் விலையும் அதிகரித்த போதிலும், கடந்த 5 ஆண்டுகளாக டீ விலையை உயர்த்தவில்லை என்கின்றனர் டீ கடை உரிமையாளர்கள்.

Must Read : இனி ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இதுதான்; தமிழக அரசு அதிரடி உத்தரவு

இதேபோல, சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக 1000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நெருக்கடிகளால் பலரும் இந்த தொழிலை விட்டு விலகும் நிலையில் உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
Published by:Suresh V
First published:

Tags: Gas Cylinder Price, LPG Cylinder, Tea Stall

அடுத்த செய்தி