தமிழகத்திற்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்து விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 14 நாட்கள் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்திற்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்து விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது, கொரோனா இரண்டாம் அலையால் தமிழகத்தில் ஏராளமானோர் பாதித்து வருகின்றனர். நாளுக்கு நாள், ஏறுமுகமாகும் கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது, 32 ஆயிரமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தி வந்தாலும் நோய்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், ஐசியூ படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் மருத்துவமனை வாயிலில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழகத்திற்கு உடனடியாக கீழ் கூறப்பட்டுள்ள விஷயங்களை செய்து கொண்டுக்க வேண்டும்.
1. தமிழகத்திற்கான ஆக்சிஜன் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
2. ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
3. தமிழத்திற்கான தடுப்பூசி டோஸ்கள் ஒதுக்கீட்டையும் அதிகப்படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.