கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே வலதுபக்கத்தில் இதயம் அமைந்துள்ள குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், கட்டியம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, பூமதி தம்பதியினருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, குழந்தைக்கு வலது பக்கத்தில் இதயம் அமைந்திருப்பதையும், இதயத்தில் ஒரே ஒரு ரத்த சுத்திகரிப்பு குழாய் இருப்பதையும் அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மனித இதயத்தில் அமைந்துள்ள 4 குழாய் அறைகள் மூலம் உடலுக்கு தேவையான ரத்தம் சுத்திகரிக்கப்படும் நிலையில், குழந்தையின் இதயத்தில் ஒரே ஒரு குழாய் அறை மட்டும் இருப்பதால் நாள்தோறும் குழந்தை பல இன்னல்களை சந்தித்து வருவதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

குழந்தையுடன் பெற்றோர்
அறுவைச் சிகிச்சைக்காக கடலூர், புதுச்சேரி, சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கிய பெற்றோர், சிகிக்சை செலவுக்கு 9 லட்ச ரூபாய் தேவைப்படும் என்பதால் பணமின்றி சொந்த ஊருக்கே வேதனையுடன் திரும்பி சென்றனர்.
தங்களது 10 மாத குழந்தை சுபேந்திரன் நாள்தோறும் வேதனைப்படுவதைக் கண்டு கண்ணீர் விடும் பெற்றோர், குழந்தையை காப்பாற்றுவதற்கு தமிழக அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க... தீவிர வலிப்பு நோயால் தவிக்கும் 17 வயது இளைஞர்... உதவ முன் வருமா அரசு?
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.</
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.