ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரேஷன் கடைகளில் தனித்தனி அரிசி.. ஜனவரி முதல் முக்கிய மாற்றம்.. ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

ரேஷன் கடைகளில் தனித்தனி அரிசி.. ஜனவரி முதல் முக்கிய மாற்றம்.. ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

ரேஷன் கடை

ரேஷன் கடை

பொது மக்களுக்கு மாநில அரசால் வழங்கப்படும் அரிசியை ஒரு ரசீது ஆகவும் மத்திய அரசால் வழங்கப்படும் அரிசியை ஒரு ரசீது ஆகவும் அடித்து வழங்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியாய விலை கடைகளில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அரிசியை தனித்தனியாக வழங்க உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியை நாளை ( 01.01.23) முதல் 2 முறையாக ரசீது அடித்து வழங்க உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நியாய விலை கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், “பொது மக்களுக்கு மாநில அரசால் வழங்கப்படும் அரிசியை ஒரு ரசீது ஆகவும் மத்திய அரசால் வழங்கப்படும் அரிசியை ஒரு ரசீது ஆகவும்  வழங்க வேண்டும்.

இந்த முறையினை பின்பற்றாமல் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினால் அதற்குண்டான வேறுபாட்டு தொகையினை அரசிற்கு செலுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும்”  என குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Ration Shop, Rice