டெல்டாவில் 4 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி.. வீணாகும் நெல் மூட்டைகள்.. வேதனையில் விவசாயிகள்..

தஞ்சை அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யவில்லை என கூறி விவசாயிகள் நெல்லை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

  • Share this:
கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் தொடங்கின. குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன.

ஆனால் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதால், நெல் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, தஞ்சை மாவட்டம் தென்னங்குடி அருகே அமைந்துள்ள நிலையத்தில், கடந்த 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், தஞ்சை - பூதலூர் சாலையில் நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாள் ஒன்றுக்கு 1,500 மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் படிக்க...நிலுவைத் தொகையை விரைவாக வழங்கவேண்டும்.. ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்..

 மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால் நெல் மூட்டைகள் தேக்கமடைந்திருப்பதாகவும், இதன் காரணமாகவே கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் நெல்கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறப்பதோடு, அறுவடை இயந்திரங்கள் எளிதாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
First published: October 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading