நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் முறையாக சுத்திகரிக்காமல் சாய கழிவு நீரை வெளியேற்றிய 11 சாய ஆலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் சாய ஆலைகளில், பெரும்பாலானவை சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப் படுகின்றன. இத்த கழிவு நீர் ஆற்றில் கலந்து தண்ணீர் மாசடைகிறது.
இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள், புற்றுநோய், உடல் ஒவ்வாமை உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கால்நடைகளும், மீன்களும் பாதிக்கப்படுகின்றன.
பிரதான வடிகாலில் சாயக்கழிவு நீர் சென்றால், இதைபார்த்து பொதுமக்கள் மாசுகட்டுபாட்டு வாரியத்திற்கு தகவல் தெரிவித்தால், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை மாசுகட்டுபாட்டுவாரிய தலைமை அலுவலகத்தின் உத்தரவின் பேரில் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விதிகளை மீறி செயல்பட்ட சாய ஆலைக்கு மின் இணைப்பைத் துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதன் தொர்ச்சியாக பள்ளிபாளையத்தில் சமயசங்கிலி, ஆவத்திபாளையம், களியனூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 11 சாய ஆலைகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் உத்தரவின்பேரில், மாசுகட்டுபாட்டுவாரியம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Must Read : பிரதமர் வருவதும் திட்டங்களை தொடங்கி வைப்பதும் நல்லது தான் ஆனால்.. இடித்துரைக்கும் கே.பாலகிருஷ்ணன்

அதிகாரிகள் ஆய்வு
தொடர்ந்து ஓடைகளில் செல்லும் நீரில் உள்ள உப்பு தன்மை குறித்தும் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அனுமதி பெற்று இயங்கும் சாய ஆலைகள் கழிவுகளை முறையாக சுத்திகரிக்காமல், சாய கழிவுகளை நேரடியாக வெளியேற்றி வருவது அப்பகுதி மக்களிடையே நோய் பாதிப்பை உண்டாக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - ரவிக்குமார், நாமக்கல். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.