Home /News /tamil-nadu /

கோவை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

மாதிரி படம்

மாதிரி படம்

இவற்றின்  மதிப்பு 1.83 கோடி ரூபாய். இதில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பதுக்கி கடத்தி  வந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த பெரோஸ் ரஹ்மான் என்ற பயணியை கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
சார்ஜாவில்  இருந்து விமான மூலம் கடத்தி வரப்பட்ட 3.5  கிலோ தங்க நகைகளை கோவை விமானநிலையத்தில்  வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ஜாவில் இருந்து கோவை வரும் விமானத்தில் தங்க நகைகள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு  அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று காலை சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த சந்தேகத்திற்கிடமான  பயணிகள் ஏழு பேரை பிடித்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Also Read : தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

அப்போது அவர்கள் உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்க கட்டி மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். சுமார் 3.5 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின்  மதிப்பு 1.83 கோடி ரூபாய். இதில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பதுக்கி கடத்தி  வந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த பெரோஸ் ரஹ்மான் என்ற பயணியை கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Raj Kumar
First published:

Tags: Coimbatore, Gold, Smuggling

அடுத்த செய்தி