• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • “மதுபான விலை உயர்ந்ததால் தமிழகத்திற்கான வருவாயும் உயர்ந்துள்ளது“ - அமைச்சர் தங்கமணி

“மதுபான விலை உயர்ந்ததால் தமிழகத்திற்கான வருவாயும் உயர்ந்துள்ளது“ - அமைச்சர் தங்கமணி

அமைச்சர் தங்கமணி (கோப்பு படம்)

அமைச்சர் தங்கமணி (கோப்பு படம்)

  • Share this:
    மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதால்தான் தமிழகத்திற்கான வருவாயும் அதிகரித்துள்ளதாக பேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

    பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ் பேசும்போது, மதுக்கடைகளை மூடுவதாக அரசு அறிவித்ததாகவும் ஆனால் மதுவிற்பனை வருவாய் அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்றுதான் தாங்கள் உறுதியளித்ததாக சொன்னார். மது விற்பனை வருவாய் என்பது திமுக ஆட்சி காலத்திலும் அதிகமாகத்தான் இருந்தது என்றும், விலைவாசி அதிகரிப்பதற்கு ஏற்ப அதன் வருவாயும் அதிகரிக்கிறது என்றும் பதில் அளித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: