முன்னாள் நண்பனை கொலை செய்து உடலை தூக்கி சென்ற இந்நாள் நண்பர்கள் - பகீர் பின்னணி

கொலையான அலெக்ஸ்

கத்தியால் வெட்டியும் தலையில் கல்லை போட்டு கொலை செய்தும், உடலை கடத்திச் சென்று குப்பை கிடங்கில் வீசிச் சென்ற கொடூரம்.

  • Share this:
சென்னையில் வீட்டுக்கு வெளியில்  நின்றிருந்த  ரவுடியை கடத்தி சென்று கொலை செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். 

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ்(28). இவர் கடந்தாண்டு செய்த கொலை வழக்கு ஒன்றுக்காக விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக பெங்களூரில் தலைமறைவாக இருந்துள்ளார்.  இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக கடந்த 28-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்திலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு செல்போனில் பேசிக்கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.   அங்கு வந்த 4பேர் கொண்ட கும்பல்  அலெக்சை  வீட்டின் அருகேயுள்ள கோவில் வாசலில் வைத்து கத்தியால் சராமாரியாக வெட்டியும், தலையில் கல்லை போட்டு நசுக்கியும் கொலை செய்தனர். அலெக்ஸ் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து  கடத்தி சென்றனர்.

Also Read:  எங்க பொண்ணுகூட பழகுறத நிறுத்து - மகளின் காதலனை வீடு புகுந்து வெட்டிய பெற்றோர்கள்

இதுகுறித்து அலெக்ஸின் உறவினர்கள் காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அலெக்ஸின் உடலைத் தேடிவந்த நிலையில்  நியூ ஆவடி ரோடு,  ரயில்வே மியூசியம் எதிரேயுள்ள குப்பை கிடங்கில் அலெக்ஸ் உடல் கிடப்பது  தெரியவந்தது.இரவு ரோந்து பணியிலிருந்த தலைமைச் செயலக காலனி போலீசார் அலெக்ஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்ட அலெக்ஸ் மீது வில்லிவாக்கம், ஐசிஎப், அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. அதேபோல அவரை கொலை செய்த ஆடு சரவணன் மற்றும் டபுள் ரஞ்சித் ஆகியோர் மீது வில்லிவாக்கம், ஐசிஎப், மாங்காடு, ஆவடி உள்ளிட்ட சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு, கொலை முயற்சி, அடிதடி, செயின் பறிப்பு, மொபைல் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

Also Read: 80 வீடியோக்கள்.. 250க்கும் மேற்பட்ட நபர்கள் - ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல்

கொலை செய்யப்பட்ட அலெக்ஸ் மற்றும் கொலை செய்த ஆடு சரவணன், டபுள் ரஞ்சித்,  ஆகியோர்  முன்னாள் நண்பர்களாக இருந்து தெரியவந்தது.கடந்த ஆண்டு இவர்களின் கூட்டாளியான கருணா (எ) கருணாகரன், அலெக்ஸுக்கு தெரிந்த பெண்ணொருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அலெக்ஸுக்கும் கருணாகரனுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அலெக்ஸ் மற்றும் அவரது வேறு சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து கருணாகரனை கடந்த ஆகஸ்டு மாதம் தலையில் கல்லைபோட்டு, கொலை செய்தது தெரியவந்தது.இதனால் அலெக்ஸின் மற்ற நண்பர்கள் கருணாகரனின் கொலைக்கு பழி வாங்குவதற்காக அலெக்ஸை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கருணாகரனை கொலை செய்த அலெக்ஸ் சிறை சென்று நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சென்னையில் இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்தவர் பெங்களூர் சென்று தலைமறைவாகியுள்ளார். இந்தநிலையில் கருணாகரன் கொலை வழக்கு, நீதிமன்றத்துக்கு இன்னும் ஓரிரு தினங்களில் விசாரணைக்கு வருவதால் கடந்த 28ஆம் தேதி அலெக்ஸ் பெங்களூரிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வழக்கு விசாரணையின் முடிவில் தீர்ப்பு வழங்கப்பட்டால் அலெக்ஸ் சிறை சென்று விடுவார் அல்லது தீர்ப்பு வழங்காவிட்டால் மீண்டும் பெங்களூர் சென்று தலைமறைவாகி விடுவார் என எண்ணிய அலெக்ஸின் முன்னாள் நண்பர்கள் கருணாகரனின் நினைவு நாள் இன்னும் சில தினங்களில் வர உள்ளதையடுத்து, அலெக்ஸை கொல்வதற்காக திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் அலெக்ஸ் தனது வீட்டை விட்டு வெளியே வந்து போன் பேசியபோது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் கத்தியால் தாக்கியும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்து அவரது உடலை எடுத்துச் சென்று நியூ ஆவடி சாலையில் உள்ள குப்பை கிடங்கில் போட்டு விட்டுச் சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலைச் சம்பவத்தில் ரஞ்சித் (எ) டபுள் ரஞ்சித் உட்பட இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை ஐ.சி.எஃப் போலீசார் தேடி வருகின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: