காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கில் திரும்ப கொடுத்தால் பணம் கொடுக்கும் திட்டம் அமல்
காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கில் திரும்ப கொடுத்தால் பணம் கொடுக்கும் திட்டம் அமல்
டாஸ்மாக் கோப்பு படம்
Tasmac | டாஸ்மாக் மதுபான கடையில் மதுபாட்டில் வாங்கிபயன்படுத்திய பின்னர் காலி மது பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் கொடுத்து 10 ரூபாயை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். இன்று பிற்பகல் 12 மணி முதல் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வர துவங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக்மது கடையில் திரும்ப கொடுத்து 10 ரூபாயினை திரும்ப பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுவகைகளை வாங்கி குடித்து விட்டு,காலி மதுபாட்டில்களை வனப்பகுதி மற்றும் சாலையோரங்களில் வீசி செல்கின்றனர். உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இத்தகைய நடவடிக்கையால் சுழல் பாதிக்கப்படுகின்றது. மேலும் வனப்பகுதியில் குடித்துவிட்டு உடைந்து போடப்படும் மதுபாட்டில் கண்ணாடி துண்டுகள் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் கால்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் காலி பாட்டில்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்திரவிட்டு இருந்தது. இந்நிலையில் நீலகிரியில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து 15 இடங்களில் காலிமதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் துவக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் சாலையோரங்கள், வனப் பகுதிகள், விளை நிலங்களில் காணப்படும்காலி மதுபாட்டில்களை சேகரித்து அகற்றும் பணி நடந்து வருகிறது.
இது தவிர நீலகிரி மாவட்டத்தில் 75 டாஸ்மாக் மதுபான கடைகளில், இன்று முதல் , மதுபான பாட்டில்களின் மேல் "ஸ்டிக்கர்" ஒட்டப்பட்டு கூடுதலாக,10 ரூபாய் வசூல் செய்யப்படுகின்றது.
டாஸ்மாக் மதுபான கடையில் மதுபாட்டில் வாங்கிபயன்படுத்திய பின்னர் காலி மது பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் கொடுத்து 10 ரூபாயை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். இன்று பிற்பகல் 12 மணி முதல் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வர துவங்கியுள்ளது. உள்ளூர் மக்களும் சுற்றுலாபயணிகளும் பாட்டில்களை பொது இடங்களில் வீசாமல் இருக்கவும், சுற்று சூழல் காக்கவும் இந்த புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.