ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருடர்களிடமிருந்து அம்மாவையும், அண்ணனையும் மீட்டுக் கொடுங்கள் - வெள்ளாட்டு குட்டி நூதன மனு

திருடர்களிடமிருந்து அம்மாவையும், அண்ணனையும் மீட்டுக் கொடுங்கள் - வெள்ளாட்டு குட்டி நூதன மனு

 வெள்ளாட்டு குட்டி மனு

வெள்ளாட்டு குட்டி மனு

திருடர்களிடமிருந்து அம்மாவையும், அண்ணனையும் மீட்டு கொடுக்க கோரி வெள்ளாட்டு குட்டி மனு அளிப்பது போல் ஆட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருடர்களிடமிருந்து அம்மாவையும், அண்ணனையும் மீட்டு கொடுக்க கோரி வெள்ளாட்டு குட்டி மனு அளிப்பது போல் ஆட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

  திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் தனது வீட்டில் 15 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

  இவருடைய ஆடுகளில் சில கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது. மேலும் 2 ஆடுகள் கடந்த வாரம் காணாமல் போக அதிர்ச்சியடைந்த சரவணக்குமார்

  தனது வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி யை ஆய்வு செய்துள்ளார்.

  அதில் இரண்டு ஆடுகளையும் இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் திருடி சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை காவல் துறையினர் ஏற்று கொள்ளாத நிலையில் காணாமல் போன தாய் ஆட்டின், குட்டி ஆட்டை அழைத்துக் கொண்டு திருடர்களிடமிருந்து அம்மாவையும், அண்ணனையும் மீட்டு கொடுக்க வேண்டும் என குட்டி ஆடு மனு அளிப்பது போல் நூதன முறையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

  Also see:

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Trichy