சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பூக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ஜவஹர்லால் (87). இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தாராகப் பணியாற்றி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். தற்போது இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார்.
பொதுவாக முதியோருக்கு ஞாபகம் சக்தி என்பது குறைவது வழக்கம். ஆனால், தினந்தோறும் தினசரி நாளிதழ்கள் உள்பட பல்வேறு புத்தங்களை வாசிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்து வருகிறார். திருக்குறளில் உள்ள 1330 குறள்களில் 270 திருக்குறள்களை மனப்பாடமாக வைத்துள்ள இவர், திருக்குறளைப் படித்தால் உடல்நிலை புத்துணர்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறார்.
Also read: 90ஸ் கிட்ஸ்களின் நாயகன் சூப்பர் மேரியோவுக்கு வயது 35..
இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் சாதனங்களில் சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மூழ்கி இருக்கும் வேளையில், தினந்தோறும் வாசிப்புப் பழக்கத்தை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறார்.
இவரது புத்தக வாசிப்பு குறித்து அவருடைய மகன் இராமசந்திரன் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனுக்கு தகவல் அனுப்பியதையடுத்து, அவரை செல்போனில் வாழ்த்து கூறி நேரடியாக வந்து ஊக்கப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.