ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீதிபதிகளை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது

நீதிபதிகளை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது

முன்னாள் நீதிபதி கர்ணன்

முன்னாள் நீதிபதி கர்ணன்

சென்னை காவல் ஆணையர் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிபதி கர்ணனின் வாக்குமூலத்தை சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாகவும் சமர்ப்பித்துள்ளார்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  நீதிபதிகளை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

  தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன்,உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவமதித்து பேசியதாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2017ம் ஆண்டு கர்ணன் கைது செய்யப்பட்டார்.

  இந்நிலையில் சமீபத்தில் நீதிபதி கர்ணன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. அந்த வீடியோவில் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களை பற்றி அவதூறாக கர்ணன் பேசிய விவகாரம் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.

  இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு ஆன்லைன் மூலமாக புகார் வந்தன. அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வீடியோவை ஆய்வு செய்தனர். இதனையடுத்து முன்னாள் நீதிபதி கர்ணன் மீது 159 (கலவரத்தை துாண்டுதல்), 509 (பெண்களை அவமதித்தல்) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  அதனைத் தொடர்ந்து முன்னாள் நீதிபதி கர்ணனை விசாரணைக்கு வரும்படி சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர்.அதன்படி சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர்கிரைம் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

  இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவிகா என்ற வழக்கறிஞரும் தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் சென்னை உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் கைது செய்யவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தது.

  Also read... 7.5% இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தமுடியாத ஏழை மாணவர்களுக்கு இடம்வழங்க நடவடிக்கை - தமிழக அரசு

  சென்னை காவல் ஆணையர் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிபதி கர்ணனின் வாக்குமூலத்தை சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாகவும் சமர்ப்பித்துள்ளார்.

  இந்நிலையில் வரும் ஏழாம் தேதி தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை ஆவடியில், ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்து வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வருகின்றனர்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Judge