• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Exclusive: பாதி விலையில் விற்கப்படும் காலாவதியான உணவுப் பொருட்கள்!

Exclusive: பாதி விலையில் விற்கப்படும் காலாவதியான உணவுப் பொருட்கள்!

காலாவதி உணவுப்பொருள்

காலாவதி உணவுப்பொருள்

50 ரூபாய் விலை உடைய உணவுப் பொருட்களை வெறும் 10, 15 ரூபாய்க்கு விற்பதாக கூறி மளிகைக் கடைக்காரர் வியப்பை அளித்தார். இதில் பெரும்பாலான உணவுப் பொருட்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • Share this:
    சென்னை நீலாங்கரை அருகே மளிகை கடை ஒன்றில் காலாவதியான உணவுப் பொருட்கள் பாதி விலையில் விற்கப்படுவதும் நியூஸ் 18 தமிழின் கள ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

    சென்னை பெசண்ட் நகர் ஓடைகுப்பம் பகுதியைச் சேர்ந்த தரணி என்ற சிறுமி, கடந்த வாரம் கடையில் விற்கப்படும் குளிர்பானத்தை வாங்கி பருகிய சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்து உயிரிழந்தார். அவரது உடலும் நீல நிறமாக மாறியது. சிறுமியின் இறப்புக்கு அவர் பருகிய குளிர்பானம் காரணமா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனிடையே சென்னையின் ஒருசில பகுதிகளில் காலாவதியான பொருட்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள எஸ்.எம்.மஹாலில் செயல்பட்டு வரும் மளிகைக் கடையில் காலாவதியான உணவுப் பொருட்கள் குறைந்த  விலையில் விற்கபடுவதாக கிடைத்த தகவலையடுத்து நியூஸ் 18 தமிழ் குழுவினர் வாடிக்கையாளர்கள் போன்று அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

    இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ்: மத்திய அரசு அளித்த அதிர்ச்சி பதில்


    மளிகைக் கடைகாரரிடம் பேசியப் போது, காலாவதியான பொருட்களை மொத்தமாக வாங்கி குறைந்த விலையில் விரைவாக விற்றுவிடுவோம் என்று தெரிவித்தார். 50 ரூபாய் விலை உடைய உணவுப் பொருட்களை வெறும் 10, 15 ரூபாய்க்கு விற்பதாக கூறி வியப்பை ஏற்படுத்திய அவர், அடுத்த வாரம் பெரிய நிறுவனம் ஒன்றின் பிஸ்கட்டுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள தெரிவித்து அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார்.  இதில் பலவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு பொருட்கள் என்பது தான் நமது அதிர்ச்சிக்கு காரணம்.

    6 மாதங்கள் காலாவதியான பொருட்கள் கூட அந்த மளிகைக்கடையில் விற்கப்படுகின்றன. இது குறித்து அறிந்திருந்த பொதுமக்கள், குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதால் அதனை வாங்கி உண்டு வருகின்றனர். காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் இந்த கடை மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

    மேலும் படிக்க: ஆடு,மாடு வளர்த்தால் இனி வரி செலுத்த வேண்டும் - மதுரை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: