Home /News /tamil-nadu /

கோவில் திருவிழா, அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் தடை தொடர்கிறது!

கோவில் திருவிழா, அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் தடை தொடர்கிறது!

திருவிழாக்களுக்கு  தடை தொடர்கிறது

திருவிழாக்களுக்கு தடை தொடர்கிறது

விஜயதசமி தினம் முதல் அனைத்து தினங்களிலும் கோவில்களில் வழிபாடு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. திருவிழாக்களுக்கான தடை தொடர்ந்தது. இந்நிலையில், திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகளில்  தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ள அதேவேளையில்,  திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று இரண்டாவது அலையின் தொடக்கத்தில் பரவல் அதிகரித்து காணப்பட்டதால், கோவில், தேவாலயம், மசூதி போன்ற வழிபாட்டு ஸ்தலங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், தொற்றின் பரவல் குறையத் தொடங்கியதை தொடர்ந்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

    அதன்படி, வாரத்தில் 4 நாட்கள் வழிபாடு நடத்தவும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. திருவிழாக்கள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது. பண்டிகை காலம் தொடங்கியதால் அனைத்து நாட்களிலும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.  பாரதிய ஜனதா கட்சி, இந்து மகா சபை ஆகியவை இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன.

    இந்நிலையில்,  விஜயதசமி தினம் முதல் அனைத்து தினங்களிலும் கோவில்களில் வழிபாடு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனாலும், திருவிழாக்களுக்கான தடை தொடர்ந்தது.  கொரோனா கட்டுப்பாடுகள் இம்மாதம் 31ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில்,  புதிய தளர்வுகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து வெளியான அறிவிப்பில் திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றுக்கான தடை தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. திருவிழாக்களுக்கு தடை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு: நவம்பர் 1 முதல் என்ன இயங்கும்.. என்ன இயங்காது...


     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, Festival, Tamilnadu government

    அடுத்த செய்தி