Home /News /tamil-nadu /

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்! புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்குத் தடை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்! புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்குத் தடை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஊராட்சிப் பகுதிகளில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு குடும்ப அட்டை  உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தடைவிதித்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றிலிருந்து (2-12-2019) அமலுக்கு வந்துள்ளது.


குடும்ப அட்டை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் குடும்ப அட்டை தொடர்பாக சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் புதிய குடும்ப அட்டை மனுக்கள் மற்றும் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் தொடர்பான அறிவுறைகளை வழங்கியுள்ளது.

ஆன்லைன் மூலம் பெறப்படும் புதிய குடும்ப அட்டை மனுக்கள் நகல் குடும்ப அட்டை மனுக்கள் ஆகியவற்றை பரிசீலனை செய்து வைத்துக்கொள்ளலாம். அதுதொடர்பான ஆணைகள் எதுவும் வழங்கக்கூடாது.

அச்சடித்து பெறப்பட்ட புதிய குடும்ப அட்டைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கக்கூடாது. குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் பெயர் திருத்தம் செய்வதை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள வரை தவிர்க்க வேண்டும்.

நியாயவிலைக் கடைகளில் அரசியல் பிரமுகர்கள் புகைப்படம் கொண்டுள்ள சுவரொட்டிகள் அல்லது விளம்பர பலகைகள் இருக்கக்கூடாது. 2019-ம் ஆண்டிற்கான உள்ளாட்சித் தேர்தல் ஊராட்சி பகுதிகளுக்கு மட்டும் இந்த நடைமுறைகள் பொருந்தும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also see:


 
Published by:Karthick S
First published:

Tags: Ration card

அடுத்த செய்தி