மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை ‘ஜெ’ என்பதா? நாளிதழுக்கு நீதிமன்றம் அதிருப்தி!

கோப்புப் படம்

நாடு அல்லது மாநிலத்தின்  தலைவர்கள் குறித்து செய்தி வெளியிடும் போது அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என நாளிதழுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

  • Share this:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ‘ஜெ’ என குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட நாளிதழுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

'பெரு மழையை வெள்ளமாக மாற்றிய தமிழக அரசு' என்ற தலைப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை 'ஜெ' என குறிப்பிடப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், முதல்வரின் நடவடிக்கைகள் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி  தினமலர் நாளிதழின்  ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் நகர அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

தனக்கெதிரான இந்த வழக்குக்கு தடை விதிக்கக்கோரி நாளிதழின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா  குறித்து அவதூறு செய்தி வெளியிடவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தனிப்பட்ட முறையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆட்சேபமான செய்தி வெளியிட்டிருந்தாலும், தனக்கெதிராக வழக்கு தொடர நகர அரசு தலைமை வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: அதிமுகவில் யாரும் அதிருப்தியில் இல்லை - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!


இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே நேரத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை 'ஜெ' என குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு அதிருப்தியையும்  நீதிபதி தெரிவித்தார்.

நாடு அல்லது மாநிலத்தின்  தலைவர்கள் குறித்து செய்தி வெளியிடும் போது அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் பத்திரிக்கைகளுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
Published by:Murugesh M
First published: