மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற போதே, முதன்முறையாக எம்.எல்.ஏவாக பொறுப்பேற்ற உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த கோரிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்டப் பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில், வரும் ஜூன், 3ஆம் தேதி கருணாநிதியின், 99ஆவது பிறந்த நாள் விழாவை, மாவட்ட அலுவலகத்தில் கட்சிக்கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
உதயநிதிக்கு அமைச்சர்
மேலும், இந்தக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக, சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர் வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட இன்று திருச்சி வருகை தந்துள்ளார்.
Must Read : 600 தட்டுகளில் லாரியில் வந்த சீர்வரிசை.. கெத்து காட்டிய அத்தைகள் - பிரம்மாண்டமாக நடந்த மஞ்சள் நீராட்டு விழா!
இந்நிலையில், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கேட்டு நிறைவேற்றியுள்ள சிறப்பு தீர்மானம், திமுகவினர் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.