3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ.க வெளிநடப்பு செய்தது.

 • Share this:
  மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

   தமிழக சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்மொழிந்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளா, புதுச்சேரி, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி மேற்குவங்காளத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை  ஏற்க மறுத்த அதிமுக, பா.ஜ.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

  பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தன்னிச்சையாக ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாச்சி தத்தவத்திற்கு எதிரானது. அதனால் தான் இந்த சட்டங்களை நிராகரிக்க வேண்டியுள்ளது. இந்த மூன்று வேளாண் சட்டங்களும் உழவர்களுக்கு எதிரானது தான்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த நாட்டில் இருந்து விவசாயிகள் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான் நெற்றி வியர்வை சிந்தி உழைக்கும் பொருட்களுக்கு  உரிய விலை கிடைக்கும் வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கை. குறைந்தபட்ச ஆதாய விலை என்பது குறைந்த பட்சம் வாய் வார்த்தைக்கு  கூட கிடைக்காத சட்டங்கள் தான் இச்சட்டங்கள்” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: