சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள்... பொன்விழா நாயகன் துரைமுருகன் - பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

துரைமுருகன்

சிந்தனை ஆற்றல், சொல் ஆற்றல், சாதனை ஆற்றல் என்று  பல்வேறு திறமைகளை கொண்ட பன்முக ஆற்றல் கொண்டவர் துரைமுருகன்.

  • Share this:
நூற்றாண்டு கண்ட சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றி பொன்விழா நாயகன் நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் என்று அனைத்துக்கட்சி தலைவர்களும் பேரவையில் புகழாரம் சூட்டினர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் பேசும் போது, அனைத்து உறுப்பினர்களுக்கும் முன்னோடியாக திகழும் மூத்த உறுப்பினர் துரைமுருகன், நவரச நாயகன் தான் என்று தெரிவித்தார்.
கொங்குநாடு தேசியமக்கள் கட்சி உறுப்பினர் ஈஸ்வரன் பேசும் போது, சட்டப்பேரவையின் முழு வரலாற்றை அறிந்தவர், மகிழ்ச்சியாக இருக்ககூடியவர் என்றும் பேசினார்.

சிறந்த நிபுணரை நீர்வளத்துறை அமைச்சராக முதலமைச்சர் நியமித்துள்ளார். அண்டை மாநிலங்கள் வஞ்சிக்கும் போது நீர்வளத்தை பாதுகாக்க குரல் கொடுத்தவர் துரைமுருகன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தளி ராமசந்திரன் புகழாரம் தெரிவித்தார்.

நகைச்சுவையுடன் பொருள் போதிந்து பேசிக்கூடியவர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாலி கூறினார்.
நீர்வளங்கள் அவ்வப்போது வற்றலாம். ஆனால் 50 ஆண்டுகளாக வற்றாத ஆளுமை துரைமுருகன். தமிழகத்திற்கு தன்னம்பிக்கை தரும் இயக்கமாகவும் திமுக இருக்கிறது. இந்த இயக்கத்தின் வெற்றி வீழ்ச்சிகளிலும் பயணித்தவர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் சிந்தனைச்செல்வன் பேசினார்.

ஒரு மனிதனுக்கு சுவாம் கூட நின்று போகலாம். விசுவசம் நின்ரு போகக்கூடாது. அவ்வாறு விசுவசத்திற்கு எடுக்காட்டாக இருக்கும் துரைமுருகன், கலைஞருக்கு மட்டுமல்ல அவரது வழித்தோன்றலுக்கும் விசுவாசமாக இருப்பவர் என்று பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் புகழாரம் தெரிவித்தார்.

தலைமைச் செயலகம்


பாமக உறுப்பினர் ஜி.கே. மணி பேசும் போது, சிந்தனை ஆற்றல், சொல் ஆற்றல், சாதனை ஆற்றல் என்று  பல்வேறு திறமைகளை கொண்ட பன்முக ஆற்றல் கொண்டவர் துரைமுருகன்  என்றார்.

தான் ஏற்றுக்கொண்ட தலைவருக்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருப்பவர் என்று காங்கிரஸ் குழுத் தவைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.

எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, கடந்த 20 ஆண்டுகளாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை தெரியும். அவரிடம் இருந்து பேரவை நிகழ்வுகள் குறித்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன் என்றார்.

மேலும், அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர். ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர். உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தகாரர் தான் துரைமுருகன் என்றார். சட்டமன்ற வரலாற்றில் உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதற்கு இலக்கணமாக செயல்படக்கூடியவர் துரைமுருகன் என்று இதயபூர்வமான வாழ்த்துக்களையும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Must Read : பொன்விழா நாயகன் : சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதைக் கேட்டு கண்கலங்கிய துரைமுருகன்

மெளரிய வம்சத்தில் சிறப்பாக ஆட்சி செய்த சந்திரகுப்த மெளிரியருக்கு சாணக்கியர் துணையாக இருந்தது போல, முதலமைச்சருக்கு சாணக்கியராக இருக்கூடியவர் துரைமுருகன் என்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீதான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த பாராட்டு தீர்மானம் ஒரு மனதாக சட்டப் பேரவையில் நிறைவேறியது.
Published by:Suresh V
First published: